SWAMY VIVEKANANDA QUOTES


சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகள்.

உலகத்தின் இன்பங்களைத் தேடுகின்றீர்களே! அனைத்துப் பேரின்பத்துக்கும் ஊற்றுக்கண் இறைவனே அன்றோ!

மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கைகளே பிறப்பிடம்.

மாபெரும் உண்மைகள், இவ்வுலகின் மிக எளிய விசயங்களே - நீ உயிரோடு இருப்பதைப் போலே!

நம் துன்பங்கள் அனைத்துக்கும் பெரும் காரணம் அச்சம்தான்.

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை. நம்பிக்கை, நம்பிக்கை கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுதான் பெருமையின் ரகசியம்.

பிறருக்கு நன்மை புரிவதே புண்ணியம். பிறருக்கு தீமை புரிவதே பாவம்.

நீங்கள் பலவீனமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால்
நீங்கள் பலம் அற்றவர்களாகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் பலம் பொருந்தியவர்கள் என்று எண்ணினால் பலமுடையவர்களாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

மனித குலத்துக்கு சேவை செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்.

லட்சியத்தில் எத்தனை கவனம் செலுத்துகின்றீர்களோ அதே அளவு கவனத்தை லட்சியத்தை அடையும் வழியிலும் செலுத்துங்கள்.

பலவீனத்துக்கு மாற்று என்ன! பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது அல்ல! பலத்தைப் பற்றி சிந்திப்பதே!

முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு, அதுவே இறையன்பு.

தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ அதுவே உண்மையான கல்வி.

மிருகத்தினை மனிதனாகவும், மனிதனைத் தெய்வமாகவும் எந்தக் கருத்து உயர்த்துமோ அதுவே சமயம் எனப்படும்.

நீ எதனை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிவிடுகின்றாய். நீ சிந்தித்துத் தான் ஆகவேண்டுமென்றால் நல்ல எண்ணங்களை மகத்தான எண்ணங்களை எண்ணுவாயாக.

ஒரே ஒரு ஆசிரியர் தான் உலகில் உண்டு.அனுபவம்தான் அது.

யாரையும் அவருடைய குறைகளை வைத்து எடை போடக்கூடாது.

உதவி புரிவதை பற்றிய எல்லாக் கருத்துக்களையும் ஒன்றாகத் தொகுத்தால் அதற்குக் கடவுள் என்று பெயர்.